Posts

Showing posts from May, 2018

25 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் சிட்கோ தொழிற்பேட்டை

மானாமதுரையை அடுத்த சோமநாதபுரத்தில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1993-ம் ஆண்டு சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. முத்தனேந்தல், இடைக்காட்டூர், ராஜகம்பீரம், துத்திகுளம், கட்டிகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு இந்த சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. தொழிற்பேட்டை தொடங்கியபோது ஏராளமான தொழில் முனைவோர் தொழில் தொடங்க முன்வந்தனர். தண்ணீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி இருப்பதால் அவர்கள் ஆர்வத்துடன் இங்கு தொழில் தொடங்க வந்தனர். ஆனால் அதிகாரிகளின் அலட்சியம், நிபந்தனைகள் காரணமாக பலரும் பின்வாங்கிவிட்டனர். இதனால் கடந்த 25 ஆண்டுகளாக இந்த சிட்கோ தொழிற்பேட்டை பயன்பாடின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தற்போது மதுரை-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருவதால் தொழில் முனைவோர்களை கவருவதற்காக தொழிற்பேட்டையில் தார்ச்சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இத்தனை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் தொழிற்பேட்டையில் அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை. இதனால் தொழில் முனைவோர்கள் மீண்டும் பி

மானாமதுரை அருகே கோஷ்டி மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் கச்ச நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். சுகுமார், மலைச்சாமி, தனசேகரன், மகேசுவரன், சந்திரசேகர், தேவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் (வயது32) இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இன்னும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், வழக்கு விசாரணையை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் அதுவரை உடல்களை